Tuesday, May 18, 2010

காதல் வந்தால்..

  • காதல் வந்தால்...

  • ஹார்மோன்களின் பருவ கிளர்ச்சியில் முகம் காட்டும் பருக்களை-பார்க்கும்போதெல்லாம் கைவிரல்களால் கற்பழிப்பாய்.

    • உயிருக்குள் உயிர் புகுந்து ஊடுருவி உயிர் வாங்கும் உன்னத உண்மை உணர்வாய்.

  • கனவிலும் கவிதையாய் உளறுவாய்.

  • காகிதத்தில் அவள் பெயர் இட்டு அதையும் கவிதைஎன்பாய்.

  • தலையணை பஞ்சுகளை கெஞ்சி கெஞ்சி கொஞ்சுவாய்.

  • கோடை வெயிலும் உனக்கு கொடைக்கானல் மழையாகும்.

  • குளிர்கால கம்பளிகள் குச்சி முள்ளாய் குத்தவரும்.


  • இதுவரை கண்டு கொள்ளாத வானம் கோடிக்கண்கள் சிமிட்டி உன்னை மட்டுமே உற்றுப்பார்க்கும்.

  • வெள்ளை நிலவு வண்ணம் பூசிக்கொண்டு வாய் முளைத்து உன்னோடு நிறுத்தாமல் பேசும்.

  • தென்றல் கைபிடித்து உன்னோடு உலாவரும்.
  • மாடியில் மலர்ந்துவிட்ட ஒற்றை ரோஜா உன்வீட்டு நந்தவனமாகும்.

  • கல்லறையில் பூக்கும் கள்ளிச் செடியும்-உன் காதுக்குள் காதல் பேசும்.

  • கான்க்ரீட் பாலங்களோ களத்துமேடாய் பொய்பேசும்.

  • கருகி உருகும் தார்ச்சாலை ஒவ்வொன்றும் தனித்தீவாய் தண்ணிகாட்டும்.

  • மூச்சு விட முடியாமல் முண்டி நிற்க்கும் மாநகரப் பேருந்து மயில்வாகனமாய் மாறிப்போகும்.

  • ஓயாமல் பேசிய உதடுகள் ஊமையாகும்.

  • வார்த்தைகளின் வழி தெரியாத விழிகள் காதல் அறிக்கையின் கடைசி பக்கம் வரை கண்சிமிட்டி கடகடவென ஒப்பிக்கும்.

  • இதுவரை படிக்காத காதல் வாய்ப்பாடு இனி தலைகீழ் பாடமாகும்.

  • இடி விழுந்து எரியாத இதயம்-அவள் இமையில் விழுந்து எரியும்.

  • கனவு கழித்து வாழவும் கண்ணீர் குடித்துச் சாகவும் முடியும்.

Thursday, May 6, 2010

ஹலோ டியர் ......

ஹலோ டியர் ...... என்றேன் .....

" செருப்பு பிஞ்சிடும்" என்று பட்டேனே பதில் வந்தது ..........,
வேகமாய் நகர்ந்து விட்டேன் ..................,,,,,
பயத்தினால் அல் .......

செருப்பு பிஞ்சி விட்டால் அவள் பாதம் புண் படுமே என்று..................!